இன்று முதல் ரயில் மிதிபலகை ஏறி இறங்க மாத்திரமே

ரயில் பயணங்களின் போது மிதிபலகையில் நின்று பயணம் செய்வோர் மீது இன்று (01) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  புகையிரத பொதுமுகாமையாளர் விஜேசமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை மிதிபலகைகளில் நின்று கொண்டு பயணம் செய்வோரில் அதிகமானோர் பாடசாலை மாணவர்களாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
போதிய ஆசனங்களின்றிய நிலையில் இடவசதியின்மையால் மக்கள் இவ்வாறு மிதிபலகைகளில் பயணம் செய்வதோடு, ஆசன கொள்ளளவிலும் அதிகளவான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றமையே இதற்கு காரணம் என பயணிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து தெரிவித்த அவர், ரயில் போக்குவரத்தில் ஏற்படும் குறைபாடு விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, அதிகளவான ரயில்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Add new comment

Or log in with...