நீதிமன்றில் தொலைபேசி சத்தம்; வழக்கறிஞர் நிரபராதி? | தினகரன்

நீதிமன்றில் தொலைபேசி சத்தம்; வழக்கறிஞர் நிரபராதி?

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான றியென்சி அர்சகுலரத்னத்தின் கையடக்க தொலைபேசி நீதிமன்றில் ஓசை எழுப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்ட்டது.
 
ஆயினும் தான் நிரபராதி என அவர் தெரிவித்ததை அடுத்து, குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற நீதவான் கே.பி.கே. ஹிரிம்புரகமகே அறிவித்துள்ளார்.
 
காலி உயர் நீதிமன்றில் இன்றைய தினம் (30) வழக்கொன்று விசாரணை செய்யப்பட்டுகொண்டிருந்த வேளையில், ஜனாதிபதி வழக்கறிஞர் அர்சகுலரத்னத்தின் கையடக்க தொலைபேசி ஓசை எழுப்பியது.
 
அதனை அடுத்து, நீதிமன்றில் கடமையிலிருந்த பொலிஸாரால் நீதிமன்றத்தை அவமதித்தாக கூறி அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...