முன்னாள் DIG, மகன்: சியாமை கொன்ற கொலையாளிகள்

பம்பலபிட்டிய வர்த்தகர் மொஹமட் சியாமை கடத்தி, கொலை செய்த வழக்கில், முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) வாஸ் குணவர்தன, அவரது புதல்வர் ரவிந்து குணவர்தனவுடன் மேலும் நான்கு பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7617","attributes":{"alt":"","class":"media-image","height":"462","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் விசேட உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவினாலேயே இன்று (27) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7618","attributes":{"alt":"","class":"media-image","height":"553","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
குறித்த தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை வரலாற்றில், DIG ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டு ஒன்றில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
 
குறித்த கொலை வழக்கில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன், உப பொலிஸ் பரிசோதகர் லக்மிணி இந்திக பமுணுசிங்க (மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம் வடக்கு) மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் கடமை புரியும் மூன்று கான்டபிள்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

Add new comment

Or log in with...