கோதாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் | தினகரன்

கோதாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில்

முன்னாள் பாதுகாப்பு செயலர், கோத்தாபய ராஜபக்‌ஷ இன்று (26) காலை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார்.
 
ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விளக்கமளிக்கும் பொருட்டே அவர் இன்று (26)
பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
 
அத்துடன், முன்னாள் கடற்படை தளபதிகளான ஜயந்த பெரேரா, ஜயநாத் கொலம்பகே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்ன ஆகியோரும், குறித்த ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...