காணாமல் போன தமிழ ஊடகவியலாளர்கள்: பக்கச்சார்பற்ற விசாணைகள் தேவை | தினகரன்


காணாமல் போன தமிழ ஊடகவியலாளர்கள்: பக்கச்சார்பற்ற விசாணைகள் தேவை

யாழ் ஊடகப் பிரதிநிதிகளிடம் சமந்தா பவர் வலியுறுத்தல்

தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென சமந்தா பவர் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் யாழ். ஊடக அமையப் பிரதிநிதிகளை பொது நூலகத்தினில் சந்தித்தவேளை இக்கருத் தினை முன்வைத்தார். இந்த வேளையில்,

யாழ். ஊடக அமையம் அவரிடம் கையளித்த மகஜரின் தமிழாக்கம் வருமாறு, வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தாங்கள் யாழ். ஊடக அமையத்தினரை சந்திக்க விருப்பங்கொண்டமைக்கு எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகினில் மோசமான அடக்கு முறைகளை எதிர்கொண்டு பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டும் காணாமல் போகவும் செய்யப்பட்டுள்ள சூழலில் வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்களினது குரலாக ஒலிக்கும் பலம் வாய்ந்த அமைப்பாக யாழ். ஊடக அமையம் உள்ளது.

பின்வரும் இருவிடயங்கள் தொடர்பினில் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர யாழ். ஊடக அமையம் விரும்பு கின்றது.

வடக்கு, கிழக்கினில் கடந்த 2000ம் ஆண்டு முதல் மாறி மாறி ஆட்சி யிலிருந்த அரசின் கீழுள்ள நிர்வாகத்தினில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி யாழ்ப்பாணத்தினில் பிபிசி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் அரங்கேறிய படுகொலை கலாசாரம் கடந்த அரசினில் உச்சம் பெற்றிருந்தது. அ

தேபோன்று சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எனும் ஊடகவியலாளர் 2007ம் ஆண்டின் முற்பகுதியினில் அவரது வீட்டிற்கு அருகினில் இராணுவ முகாம் ஒன்றிற்கருகினில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டிருந்தார். இன்று வரை அவர் பற்றிய தகவல்கள் இல்லை.

அதே போன்று பல ஊடகப்பணி யாளர்களும் கடமை நேரத்தினில் கொல்லப்படும் காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தொடர் பிலும் தகவல்களில்லாதுள்ளது.

இதேபோன்று இறுதி யுத்தம் வன்னியில் நடைபெற்றிருந்த காலப்பகுதியில் அங்கு பணியாற்றியிருந்த பல ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களிற்கு என்ன நடந்ததென்பது தெரியாதேயுள்ளது. அவர்கள் உயிருடன் தடுப்பு முகாம்களி னிலுள்ளனரா அல்லது கொல்லப்பட்டு விட்டார்களாவென்பதை குடும்பங்ள் அறியாதேயுள்ளன.

எனினும், இதுவரை ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட எவருமே சட்டத்தின் முன்னதாக நிறுத்தப்படவோ தண்டிக்கப் படவோ இல்லையென்பதே உண்மை யாகும். அவர்கள் சுதந்திரமாக இன்றும் நடமாடும் சூழலே வடகிழக்கினில் நிலவுகின்றது.

இவ்வாண்டின் ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னராக இது தொடர்பினில் நீதி கிட்டுமென நாம் எதிர்பார் த்திருந்த போதும் அது நடந்திருக்க வில்லை.

ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாக ஊடகவியலாளர்களும் இருந்திருந்தது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையினில் பகிரங்கமாகவும் நேரடியாகவும் வட, கிழக்கினில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவா ளிகளை சட்டத்தின் முன்நிறுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமரை யாழ். ஊடக அமையம் கேட்டிருந்தது. எந்தவொரு பதிலும் இது தொடர்பினில் இதுவரை கிட்டி யிருக்கவில்லை.

இத்தகையதொரு சூழலினில் மீண்டுமொரு முறை இதே அழைப்பினை தங்களினூடாக இலங்கை அரசிற்கு நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.

 நல்லெண்ணமொன்றை ஏற்படுத்தவும் ஊடக சுதந்திரத்தை பேணிப்பாதுகாக்கவும் சர்வதேச ஊடக அமைப்புக்களின் கண்காணிப்பின் கீழ் பக்கச்சார்பற்ற வகையினில் விசாரணைகள் முன்னெடுக் கப்படவேண்டுமென இலங்கை அரசிற்கு ஆலோசனை கூற தங்களை யாழ். ஊடக அமையம் கேட்டுக்கொள்கின்றது.

ஊடகவியலாளர்கள் படுகொலை களுடனும் காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவங்களுடனும் தொடர்புடைய சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்பட்டால் மட்டுமே எதிர்வருங் காலங்களினில் ஊடக சுதந்திரத்தை பேணும் சூழலொன்றை ஏற்படுத்த முடியுமென அறியத்தருவதுடன் தெற்கினில் சக பெரும்பான்மை ஊடக வியலாளரான பிரகீத் எக்லினிய கொட காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பினில் முன்னெடுக்கப்படும்.

விசாரணைகள் போன்று தமிழ் ஊடகவியலாளர்களது கொலை மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலும் இனரீதியான பாகுபாடுகளின்றி விசார ணைகள் நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும். கடந்த 30 வருட யுத்தம் திட்டமிட்ட அரசுகளது அடக்கு முறைகளினால் வடக்கு கிழக்கினில் ஊடகத்துறை மிக மோசமான பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றது.

திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான அடக்கு முறைமைகளினால் புதிதாக ஊடகப் பணிகளிற்கு வருவதென்பதும் கேள்விக்குறியாக இருப்பதுடன் ஏற்கனவே பணியிலுள்ள ஊடகவியலாளர்கள் தொழில்சார் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் இல்லாதேயிருந்து வருகின்றது.

யாழ். ஊடக அமையத்தினில் ஆரம்ப கட்டமாக ஊடகவியலாளர்களிற்கான மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சி பட்டறைகளை நடத்த தூதுவராலயமூடாக வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியறிதல்களினை தெரிவித்துக்கொள்வதுடன் வளமான ஊடக பாரம்பரியமொன்றை ஏற்படுத்தவும் திறன்சார் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளவும் தங்களது உதவிகளை வழங்கியுதவுமாறும் கேட்டுக்கொள் கின்றோம்.

இவ்வாறு யாழ். ஊடக அமையம் தனது மகஜரில் தெரிவித்துள்ளது.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...