காணாமல் போனதாக கூறப்படும் 4 பிக்கு மாணவர்கள் மீட்பு | தினகரன்

காணாமல் போனதாக கூறப்படும் 4 பிக்கு மாணவர்கள் மீட்பு

நேற்று (22) காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் 4 சிறுவர் பிக்குகளை இன்று (23) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கந்தேகம பிரதேச்தின், தனஞ்சயராம விகாரையைச் சேர்ந்த 11 தொடக்கம் 13 வயதைக் கொண்ட நான்கு பிக்கு மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த நால்வரும், அரலகன்வில பகுதியிலுள்ள மலை உச்சிப் பகுதியை நோக்கி சென்றதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் நாலவரையும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 
குறித்த நால்வரும் எதற்காக அங்கு சென்றனர் என்பது குறித்த மேலதிக விசாரணைகளை அரலகன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Add new comment

Or log in with...