இலங்கை வந்தார் சமந்தா; அமைச்சர் மங்கள வரவேற்பு | தினகரன்


இலங்கை வந்தார் சமந்தா; அமைச்சர் மங்கள வரவேற்பு

ஐ. நாவிற்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் இன்று (21) இலங்கை வந்தடைந்தார்.
 
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார். அவருடன் மேலும் 8 பிரதிநிதிகள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சமந்தா பவர், நாளை (22) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடவுள்ளார்.
இக்கூட்டத்தில் இரா. சம்பந்தன் தலைமையிலான த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை. சேனாதிராஜா, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,  எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
 
இச்சந்திப்பின் பின்னர் சமந்தா பவர், நாளை (21) வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 
இதில், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனை சந்திக்கவுளளதோடு மோதல்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் திங்கட்கிழமை (23) ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளை பவர் சந்திக்கவுள்ளார்.
 
இருநா நாட்டு உறவை வலுப்படுத்த அமெரிக்கா ஈடுபாடு கொண்டுள்ளதோடு, புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறிதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...