யாழ்ப்பாண செய்தி ஊடகவியலாளருடன் சமந்தா பவர் | தினகரன்


யாழ்ப்பாண செய்தி ஊடகவியலாளருடன் சமந்தா பவர்

இலங்கை வரும் அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் சமந்தா பவர் யாழ்ப் பாணம் சென்று அங்குள்ள உள்நாட்டு ஊடகவியலாளர்களை நேரில் சந்திக்கவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சமந்தா பவர் நாளை வருகிறார்.

இவர் யாழ்ப்பாணத்திலுள்ள (உதயன்) பத்திரிகையின் தலைமை அலுவலகத்திற்கு செல்ல ஏற்பாடாகியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.

ஆசிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் சமந்தா தற்போது இந்தியாவின் களநிலைமைகளை ஆராய்ந்து வருகிறார். இவர் நாளை முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.

அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இங்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் இளைஞர்களை சந்தித்து உரையாற்ற வுள்ளார்.

யாழ். விஜயத்தின்போது இவர் மோதல்களினால் சேதமடைந்த ஒஸ் மானியா கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொள்வதுடன் யாழ்ப்பாண நூலகத்தினையும் நேரில் சென்று பார்வை யிடவுள்ளார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...