மஹிந்த அரசால் முடியுமெனில் ஏன் முடியாது? | தினகரன்

மஹிந்த அரசால் முடியுமெனில் ஏன் முடியாது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது 116 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
 
அவரது ஆட்சியின்போது அவ்வாறு கைதிகளை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் மீதமுள்ளவர்களை விடுதலை செய்யமுடியாது. என மங்கள சமரவீர கேள்வி எழுப்பினார்.
 
நேற்றையதினம் (18) சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
 
அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை. அவர்களை சமூகமயப்படுத்துவதோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
 
இச்சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவதில் அர்த்தம் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், சர்வதேச பயங்கரவாதத்தை தடுக்கும் வகையிலான சட்டத்தை உருவாக்குவது அவசியம் என சுட்டிக்காட்டினார்.
 
விடுதலை புலிகளோடு தொடர்பில் இருந்தமை மற்றும் அவ்வியக்கத்தில் இருந்தமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். 
 
இதுவரை, 216 அரசியல் கைதிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளனர். இவர்களில் 52 பேருக்கு இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்பதோடு, 116 பேருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளபோதிலும் அவர்களது வழக்கு விசாரணைகள் 12 வருடத்தை தாண்டி தொடர்ந்தும் இழுபறியிலுள்ளது.
 
எனவே அவர்களை இவ்வாறு தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் வைத்திருப்பதில் எவ்வித பலனும் இல்லை என சுட்டிக்காட்டினார்.

Add new comment

Or log in with...