ஆட்டோ-பஸ் விபத்து: இரு பெண்கள் பலி | தினகரன்

ஆட்டோ-பஸ் விபத்து: இரு பெண்கள் பலி

வாரியபொல தினகரன், மாவதகம தினகரன் நிருபர்கள்

குருநாகல் - கண்டி வீதி மல்லவபிட்டியில் நேற்று காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி - பஸ் விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குருநாகலையிலிருந்து கண்டி நோக்கி முச்சக்கர வண்டியில் சென்ற தாயும் மகனும், (முச்சக்கர வண்டி சாரதி) தாயின் சகோ தரியுமே இந்த விபத்தில் சிக்கியவர்களாவர்.

இரு பிள்ளைகளின் தாயான சித்தி பரீனா உம்மா (43) என்பவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன், நான்கு பிள்ளைகளின் தாயான ஜனா பீபி (48) என்பவர் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட பின் நேற்று ஒரு மணியளவில் உயிரிழந்தார். முச்சக்கரவண்டி சாரதி (மகன்) முபஸ்ஸர் (21) ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இவர்களின் முச்சக்கர வண்டிக்கு எதிரே வந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்லமுயன்ற தனியார் பஸ்ஸொன்றே இவர்களை மோதி யுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த பெண்ணும் படுகாயமடைந்து மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். இதன் போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றுக்கும் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள் ளதுடன் குருநாகல் பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Add new comment

Or log in with...