கொண்டயா ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்? | தினகரன்

கொண்டயா ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்?

கொட்டதெனியாவ சிறுமி, சேயா செதவ்மி கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்தவை கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு ஆஜராகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
 
கொண்டையாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டித்து, அவரது நண்பர்கள் எனக்கூறப்படும், இனந்தெரியாத சிலர் கம்பஹா, பெம்முல்ல பிரதேசத்திலுள்ள சில  வீடுகளுக்கு சென்று மக்களை அச்சுறுத்தியுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே, பிரியசாந்தவை கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...