போதைப்பொருள் விற்றவர் ஆயுள் முழுதும் சிறையில்

மோபீன் (Morphine) போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மோபீன் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்தவருக்கு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தீ சுரசேனவினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
இவ்வழக்கின்போது, எமது நாட்டை சீர்குலைக்கும், சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கெல்லாம் பாடமாக அமையும் வகையில், இக்குற்றவாளிக்கு உயர்ந்த தண்டனையை வழங்குமாறு, அரச வழக்கறிஞர் திருமதி கே. வீ. இந்திகா கோரினார்.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் திகதி தெமட்டகொடையில், ஒரு கிராமுக்கு குறைந்தளவான ஹெரோயின் மற்றும் 7.69 கிராம் மோர்பீனை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை  குறித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மொஹமட் சாபி மொஹமட் நெஸ்வருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 

Add new comment

Or log in with...