மஹிந்த உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை | தினகரன்

மஹிந்த உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக பயன்படுத்திய பஸ்களுக்கான பணத்தை செலுத்தாமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்னவினால் இன்று (13) விடுக்கப்பட்ட அழைப்பாணையில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியமைக்காக செலுத்த வேண்டிய ரூபா 14 கோடி 20 இலட்சத்தை இது வரை செலுத்தாமை குறித்தே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.ம.சு.மு முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, தேர்தல் குழு உறுப்பினர் காமினி செனரத் உட்பட ஐ.ம.சு.முவின் 2015 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கான செயற்குழு உறுப்பினர்கள் 7 பேரை எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை போக்குவரத்து சபையால் குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 

Add new comment

Or log in with...