பேத்தாழை முருகன் ஆலயத்திற்கு அருகில் கைக்குண்டு

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நீரோடையில் இருந்து கைக் குண்டு ஒன்று இன்று (06) வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6729","attributes":{"alt":"","class":"media-image","height":"480","style":"width: 640px; height: 480px;","typeof":"foaf:Image","width":"640"}}]]
 
தற்போது மட்டக்களப்பில்  பெய்துவரும் அடைமழை காரணமாக நீர் ஓடைகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக சிறுவர்கள் சிலர் குறித்த பிரதேசத்திலுள்ள நீரோடையில் மீன் பிடித்து விளையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6730","attributes":{"alt":"","class":"media-image","height":"480","typeof":"foaf:Image","width":"640"}}]]
 
இதன்போது மர்ம்மப் பொருள் ஒன்று காணப்படுவதனை அவதானித்த சிறுவர்கள், அதனை எடுத்து பார்வையிட்டுள்ளனர். பின்னர், பெற்றோர்களிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து, பிரதேசவாசிகளால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த கல்குடா பொலிசார் அதனை மீட்டுள்ளனர்.
 
அதிர்ஷ்டவசமாக சிறுவர்கள் உயிர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்த பொலிசார், குறித்த சிறுவர்களை இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர். 
 
பாசிக்குடா நிருபர்
 

Add new comment

Or log in with...