ட்விற்றரில் Favorite பட்டனுக்கு பதில் Like பட்டன் | தினகரன்

ட்விற்றரில் Favorite பட்டனுக்கு பதில் Like பட்டன்

சமூகவலைத்தளமான ட்விற்றர் அண்மைக்காலமாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அந்தவகையில் நேற்று (03) அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு மாற்றமே 'Favorites' பட்டனுக்கு பதிலான 'Like' பட்டன்.
 
இது ட்விற்றருக்கு புதிதாக இருந்தாலும், Facebook, Instagram, Periscope தளங்களிலுள்ள Like பட்டனை போன்றது என்பதே இதன் சாராம்சமாகும்.
 
இது குறித்து தெரிவித்துள்ள ட்விற்றர், புதிதாக இணையும் பயனர்களுக்கு Favorite பட்டனில் காணப்படும் நட்சத்திர அடையாளத்தால் குழப்பம் ஏற்படுவதனாலேயே இம்முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.
 
குறித்த புதிய Like பட்டனின் அடையாளமாக 'இதயம்' ஒன்று இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...