ரவிராஜ் கொலை: 06 பேருக்கு எதிராக வழக்கு | தினகரன்

ரவிராஜ் கொலை: 06 பேருக்கு எதிராக வழக்கு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் கைதான 06 பேருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால், கொழும்பு அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (03) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
குறித்த கொலை தொடர்பில் இது வரை 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஏனைய மூவர் மீதும் குற்றப் பதிவு மேற்கொள்வதற்கு, அரசதரப்பு வழக்கறிஞரின் அறிவுறுத்தலை பெறுமாறு, மேலதிக நீதவான் நிரோஷா பிரணாந்து, இரகசிய பொலிஸாருக்கு அறிவித்தார்.
 
குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
 
நடராஜா ரவிராஜ், கடந்த 2006 இல் இராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...