துமிந்தவுக்கு சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி | தினகரன்


துமிந்தவுக்கு சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சிங்கப்பூர் செல்வதற்கான அனுமதியை கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
 
பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பிலான 13 சந்தேகநபர்களில் துமிந்த சில்வாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
துமிந்த சில்வாவுக்கு குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த சம்பவத்தின்போது, தலையில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்தான மருத்துவ பரிசோதனைகளுக்காக சிங்கப்பூரிலுள்ள மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை அவர் கோரியிருந்தமை (28) குறிப்பித்தக்கது.
 
அதன் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 10 முதல் டிசம்பர் 02 ஆம் திகதி வரை குறித்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் பொருட்டு சிங்கப்பூர் செல்வதற்கான அனுமதியை வழங்கிய உயர் நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட் ஆகியவற்றின் பிரதியை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

Add new comment

Or log in with...