இசை நிகழ்ச்சியில் 12 வயது சிறுவன் கொலை | தினகரன்

இசை நிகழ்ச்சியில் 12 வயது சிறுவன் கொலை

மாத்தறை, திஹகொட பிரதேசத்தில், இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 12 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.
 
இன்று பிற்பகல் 1.15 மணியளவில் திஹகொட பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின்போது, இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சிறுபிரச்சினை மோதலாக மாறிய போது கத்திக் குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதன்போது இக்கத்திக் குத்துக்கு 20 மற்றும் 12 வயதான இருவர் இலக்காகியுள்ளதோடு, அதில் 12 வயதான சிறுனே மரணமடைந்துள்ளான்.
 
மோசமான காயத்திற்குள்ளான 20 வயது இளைஞன்  தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இச்சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களான இவர்கள் 18, 19, 22 வயதான இளம் பராயத்தினர் என பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

Add new comment

Or log in with...