வடக்கு தெற்கு பெரும்பான்மை வாதமே நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியது

வடக்கு மற்றும் தெற்கில் காணப்பட்ட பெரும்பான்மை வாதமே சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டில் சமாதானத்தை யும் அமைதியையும் ஏற்படுத்த முடியாமல் போனமைக்கு பிரதான காரணம் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வடக்கில் எல்.ரி.ரி.ஈயினர் தமிழ் சமூ கத்தின் பெரும்பான்மைவாதத்தை உறுதிப் படுத்தவே முஸ்லிம்களை வெளியேற்றி யிருந்தனர். அதேபோல தென்பகுதியில் தமது பெரும்பான்மைவாதத்தை காண் பிப்பதற்கே அடிப்படைவாதத்தை தூண்டி விடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்ப டுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்பொழுது தோன்றியிருக் கும் வரலாற்று முக்கியத்துவமான சந் தர்ப்பத்தை பயன்படுத்தி கடந்தகால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப் பதற்கு சகல தரப்பினரும் ஒன்று படுவது அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடபுல முஸ்லிம்கள் வெளி யேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த் தியடைவதை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரை யாடல் நிகழ்வொன்றை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வெளிவிவ கார அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

வடபகுதியில் பல்லின சமூகத்தை ஏற்றுக்கொள்ள முடியாத எல்.ரி.ரி.ஈயினர் அங்கிருந்து முஸ்லிம் மக்களை வெளி யேற்றியிருந்தனர். இதன்மூலம் வடக்கில் தமிழர்கள்தான் பெரும்பான்மை என எண்ணிக்கைகளை காண்பித்து அதனை நியாயப்படுத்தினர். தமிழர்கள் சிலரும் இதனை நியாயப்படுத்தினர்.

மிகவும் குறு கிய காலத்துக்குள் சகல முஸ்லிம்களையும் வெளியேறுமாறு கூறி அடிப்படையான நாகரீகத்தைக்கூட எல்.ரி.ரி.ஈயினர் கடைப் பிடிக்கத் தவறியுள்ளனர்.

எனினும் பெரும்பான்மை சமூகம் இதுவிடயத்தில் ஒற்றுமையுடன் செயற்ப ட்டு சிறுபான்மை சமூகத்தின் உரிமை யைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

குறிப்பாக யுத்தம் முடிவடைந்த பின்னர் தென்பகுதியில் பெரும்பான்மை வாதம் தனது கோரமான தலையைத் தூக் கத் தொடங்கியது. சிங்கள பெளத்த சமூகத்தின் செயற்பாடுகளுக்கு அனுமதி க்கும் வகையில் கடந்த அரசாங்கம் செயற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரலாற்று ரீதியாக ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை சகலரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை நடத்து வதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...