இன்று முதல் வாகனங்களுக்கு 90 வீத லீசிங்

வாகன கொள்வனவின்போது, அதன் பெறுமதியின் 90 வீதம் வரையான குத்தகை பெறும் வசதியை (Leasing)  இன்று (29) முதல் வாகன கொள்வனவாளர்களால் பெற்றுக்கொள்ள முடியும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இது குறித்தான, இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிவித்தலானது, அரச மற்றும் தனியார் வர்த்தக வங்கிகளுக்கு இன்று (29) அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே காணப்பட்ட 100 வீத குத்தகை வசதியானது, 2015 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டு, அது 70 வீதமாக மாற்றப்படுவதாக வர்த்மானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஆனால், இதன் மூலம் உள்நாட்டு சந்தையில் ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பை கருத்திற்கொண்டு, வானக கொள்வனவின்போதான குத்தகை பெற்றுக்கொள்ளும் வசதியை 90 வீதமாக அதிகரிப்பதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Add new comment

Or log in with...