மரமேறி விழுந்த சிறுவன் கழுத்தில் ஏறிய தடி

மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய 16 வயது மாணவன் ஒருவன், அம்மரத்திலிருந்து வீழ்ந்தபோது, கூரிய மரக் கிளையொன்று கழுத்தில் ஏறிய சம்பவம் ஒன்று புளத்சிங்கள, கலஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6304","attributes":{"alt":"","class":"media-image","height":"263","style":"width: 250px; height: 263px; float: right;","typeof":"foaf:Image","width":"250"}}]]

இன்று (27) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், காயமுற்ற சிறுவன், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"6307","attributes":{"alt":"","class":"media-image","height":"395","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
புளத்சிங்கள மகா வித்தியாலயத்தில், தரம் 11 இல் கல்வி கற்கும் துஷார லக்‌ஷான் எனும் குறித்த மாணவன், தனது நண்பர்களுடன், மாங்காய் பறிக்கும் நோக்கில் மாமரத்தில் ஏறி அதன் கிளையில் அமர்ந்து மாங்காய் உண்டு கொண்டிருக்கும்போது, திடீரென வீழ்ந்துள்ளார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6310","attributes":{"alt":"","class":"media-image","height":"421","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இதன்போது அதன் அடியில், வெட்டப்பட்ட புதர் ஒன்றில்  நீட்டிக் கொண்டிருந்த கூரிய தடி கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிக்கு இடையில் ஏறியுள்ளது.
 
இதனை அடுத்து பிரதேசவாசிகள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6311","attributes":{"alt":"","class":"media-image","height":"320","style":"width: 240px; height: 320px; float: left;","typeof":"foaf:Image","width":"240"}}]]
 
தற்போது, 3 1/2 மணித்தியால சத்திரசிகிச்சை செய்யப்பட்டு குறித்த தடி அகற்றப்பட்டுள்ளதாக கொழும்பு வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...