நியூஸிலாந்துடன் இறுதிப்போட்டிக்கு ஆஸி | தினகரன்

நியூஸிலாந்துடன் இறுதிப்போட்டிக்கு ஆஸி

ரக்பி உலகக் கிண்ண போட்டிகளின் நேற்று (25) இரவு இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியினுள் நுழைந்துள்ளது.
 
இலண்டன், டிவ்கன்ஹெமில் நடைபெற்ற ஆஜென்டினாவுடனான நேற்றைய போட்டியை 29 இற்கு 15 புள்ளிகள் என அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
 
அந்த வகையில் அவுஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் 4 ஆவது தடவை இதுவாகும்.
 
1991, 1999, 2003 ஆகிய இறுதிப்போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய ரக்பி அணி, 1991 மற்றும் 1999 இல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
 
அதன் அடிப்படையில் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தெரிவான நடப்பு சம்பியனான நியூஸிலாந்துடன் எதிர்வரும் சனிக்கிழமை (31) மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...