லசந்த கொலை விசாரணையில் முக்கிய தகவல்கள் | தினகரன்

லசந்த கொலை விசாரணையில் முக்கிய தகவல்கள்

சண்டேலீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக சீ. ஐ. டி.யினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தமக்கு தொலைபேசியால் மேற்கொள்ளப்பட்ட

அச்சுறுத்தல்களை கொண்டே இந்த தகவல்களை பெற முடிந்ததாக பொலிஸ் அதிகாரியான பி. எஸ். திஸேரா கடந்த வாரம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதியன்று திஸேராவுக்கு காலை 7.42 க்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.

உத்தியோகவூர்வ கடமைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு செல்லும் போது இந்த அழைப்பு கிடைத்துள்ளது.

தொலைபேசியின் மறுமுனையில் பேசியவர், தெளிவான சிங்களத்தில் நீயா லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் விசாரணை செய்கிறாய்? என்று கேட்டுள்ளார்.

இதன்பின்னர் கெட்டவார்த்தைகளால் மறுமுனையில் பேசியவர் பொலிஸ் அதிகாரியை திட்டியுள்ளார்.

முதலில் குறித்த தொலைபேசி அழைப்பை புறக்கணித்த பொலிஸ் அதிகாரி திஸேரா, பின்னர் அதனை பரிசீலித்தால் லசந்தவின் கொலை தொடர்பில் தகவல்கள் கிடைக்கலாம் என்று தீர்மானித்தார்.

இதனையடுத்து குறித்த தொலைபேசி அழைப்பு இலக்கத்தை குறித்துக் கொண்ட அவர், அதன் மூலம் கொலை தொடர்பில் பல தகவல்களை பெற முடிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் விசாரணையின் இரகசியம் கருதி அவற்றை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.


Add new comment

Or log in with...