இ.போ.ச. 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி 36,400 பேருக்கு சம்பளம் கொடுக்கும் நிலை | தினகரன்


இ.போ.ச. 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி 36,400 பேருக்கு சம்பளம் கொடுக்கும் நிலை

திறைசேரிக்கு 1500 கோடி ரூபா கடன்

“இலங்கை போக்குவரத்து சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்படும் ஆறாயிரம் பஸ்களுக்கு 36,700 பேர் சம்பளம் பெறுகின்றனர்.

2011 ம் ஆண்டு தொடக்கம் இதுவரை இ.போ.ச. 1500 கோடி ரூபாவை திறைசேரிக்கு செலுத்த வேண்டியுள்ளது” என மாகோ இ.போ.ச. டிப்போவின் குறை நிறைகளைக் கண்டறிய வருகை தந்த போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டார். அவர் தமது உரையில்,

பொது மக்கள் நலன் கருதி மேற்கொள்ளும் போக்குவரத்து சேவையின் மூலம் இலாபத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

மாதந்தோறும் திறைசேரி, ஊழியருக்கு சம்பளம் வழங்குவதற்காக பத்து மில்லியன் ரூபாவை வழங்குகின்றது 2011 முதல் இது வரை ஊழியருக்கு வழங்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி ஆயிரம் கோடியாக உள்ளது. ஈ.டி.எப். ஐம்பது கோடி வழங்க வேண்டியுள்ளது. உதிரிப்பாகங்கள் கொள்வனவிற்கு நூறு கோடி செலுத்த வேண்டும்.

இவ்வாறு பெருந்தொகைப் பணத்தை திறைசேரிக்கு போக்குவரத்து சபை செலுத்த வேண்டும். எது எவ்வாறாயி னும் பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் போக்குவரத்து சேவையை சீரமைக்க நடவடிக்கை எடு க்கப்படுவதுடன் ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு திருப்தியுடன் பணி யாற்றக் கூடிய சூழல் உருவாக்கப் படுவதுடன் படிப்படியாக டிப்போக் களை நவீன மயப்படுத்தும் செற் றிட்டமொன்று மேற்கொள்ளப்படுமென் றும் குறிப்பிட்டார்.

மாகோ நிருபர்  


Add new comment

Or log in with...