மகன்கள் ஐரோப்பாவில்; தந்தை கஞ்சா விற்பனையில் | தினகரன்

மகன்கள் ஐரோப்பாவில்; தந்தை கஞ்சா விற்பனையில்

இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவந்த 60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இருவரையும், குறித்த கஞ்சா பொதிகளுடன் கொடிகாமம், மிரிசவில் பகுதியில் கைதுசெய்துள்ளதாக (20) கலால் திணைக்கள ஆணையாளர் புஷ்பகுமார சில்வா தெரிவித்தார்.
 
கலால் திணைக்கள அதிகாரிகள், பல நாட்களாக மேற்கொண்ட  விசாரணைகளின் பின்னர், இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6076","attributes":{"alt":"","class":"media-image","height":"579","style":"width: 325px; height: 579px; float: right;","typeof":"foaf:Image","width":"325"}}]]
கலால் திணைக்கள அதிகாரி ஒருவரை, கொள்வனவு செய்பவரைப் போன்று பயன்படுத்தி, மற்றொருவரின் உதவியுடன் சந்தேகநபர்களிடம் கஞ்சாவை கோரியுள்ளனர்.
 
அதன்படி ஒரு கிலோ கஞ்சாவை ரூபா ஒன்றரை இலட்சம் விகிதம் 25 கிலோ கஞ்சாவைக் கொண்ட 10 பொதிகளை, மிருசவில் பிரதேசத்தின் பிதான வீதியிலிருந்து 7 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டில் கொள்வனவாளர் வேடத்தில் சென்ற கலால் அதிகாரியிடம் விற்கும் வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6077","attributes":{"alt":"","class":"media-image","height":"365","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 650px; height: 365px; float: left;","typeof":"foaf:Image","width":"650"}}]]பதுங்கியிருந்த கலால் அதிகாரிகள் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததோடு, அடர்ந்த காட்டில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மேலும் மூன்று கஞ்சா பொதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
 
குறித்த கஞ்சா பொதிகளினுள் நீர் செல்லாதவாறு, அவை பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டிருந்தன.
 
இந்தியாவின் மதுரையிலுள்ள சாமியார் என அழைக்கப்படும் ஒருவரிடமிருந்து ராமேஸ்வரம் வழியாக மீன்பிடி படகின் மூலம் இலங்கைக்கு கொண்டு வருவதாகவும் பேதுருதுடுவ, தொண்டமானாறு, வல்வெட்டித்துறை ஆகிய கடற்கரை பிரதேசங்களிலுள்ள நிலத்தில் அவற்றை பதுக்கி வைப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6078","attributes":{"alt":"","class":"media-image","height":"365","style":"font-size: 13.008px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
சந்தேகநபர்கள், பேதுருதுடுவ, தொண்டமானாறு பிரதேசத்தில் வசிக்கும் 61 மற்றும் 47 வயது நபர்களாவர்.
 
61 வயதான சந்தேகநபரின் 03 புதல்வர்களும் ஐரோப்பிய நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் எனவும், 5 வருடத்திற்கு முன்னர் சுவிற்ஸலாந்தில் வசித்து வந்த இவர் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
 
அடுத்தவர் ஐந்து குழந்தைகளின் தந்தையான மீனவர் எனத் தெரிய வந்துள்ளது.

Add new comment

Or log in with...