வெலே சுதாவின் தங்கை கைது | தினகரன்


வெலே சுதாவின் தங்கை கைது

வெலே சுதா என அழைக்கப்படும் கம்பொல விதானகே சமந்த குமாரவின் தங்கை உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த மூவரும் இன்றைய தினம் (21) இராஜகிரியவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த மூவரும் கைது செய்யப்படுகையில் 111 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான வெலே சுதாவுக்கு, கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி, நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...