நீதி அமைச்சருக்கு அழைப்பாணை | தினகரன்

நீதி அமைச்சருக்கு அழைப்பாணை

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி உச்சநீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
 
சில நீதிபதிகள், சந்தேகநபர்களுக்கு, சட்டத்தை மீறிய வகையில் தண்டனை வழங்குவதாக தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிணி மாரசிங்கவினால், குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதிக்கு முன்னர் உச்சநீதிமன்றில் விளக்கமளிக்குமாறு குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த மனுவில், கொழும்பு, மொரவக மற்றும் தங்கல்லை நீதிமன்றங்களில் இவ்வாறான சட்டத்தை மீறிய தண்டனை வழங்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
மேலும், சிறு குற்றத்திற்கு, 4 வருட சிறை வழங்க வேண்டிய நிலையில், ஒரு சில சந்தர்ப்பந்தர்த்தில் 34 தொடக்கம் 66 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
 
அதன்படி, இவ்வாறான நிலை மிகவும் பாரதூரமானது எனத் தெரிவித்த நீதிபதி, இது குறித்து ஆராய்ந்து, தெளிவுபடுத்துமாறு நீதிபதி, நீதியமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தார்.

Add new comment

Or log in with...