நடிகர் சங்க தேர்தல்: தலைவர் நாசர், செயலாளர் விசால் (Update)

நடிகர் சங்கத்தின் இறுதித் தேர்தல் முடிவுகளின் படி தலைவர் பதவிக்காக போட்டியிட்ட, நடிகர் நாசர் 1,344 வாக்குகளைப் பெற்றதோடு, சரத்குமார் 1,231 வாக்குளைப் பெற்றிருந்தார்.
 
1,445 வாக்குகளைப் பெற்ற நடிகர் விசால், நடிகர் சங்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
 
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராதாரவி 1,138 வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
பெரும் பரபரப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்தத் தேர்தலின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் 'பாண்டவர் அணி' (நாசர், விசால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன்) என பெயர் சூட்டப்பட்டிருந்த விஷால் அணியினர் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
இது குறித்தான தேர்தல் முடிவு, நீதிபதி இ. பத்மநாபனினால், சற்று முன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

 
10.03pm
நடிகர் சங்க தேர்தல்: சரத்குமார் 658; நாசர் 491 (இது வரை)
 
இன்று (18) நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
 
அந்த வகையில், இது வரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரத்குமார் 843 வாக்குகளையும், நாசர் 746 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
 
இதேவேளை  செயலாளர் பதவிக்காக போட்டியிட்ட விசால் 961 வாக்குகளையும், ராதா ரவி 825 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5947","attributes":{"alt":"","class":"media-image","height":"430","style":"width: 405px; height: 430px; float: right;","typeof":"foaf:Image","width":"405"}}]]
 
இதேவேளை, தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நடிகர் விசால் மற்றும் சரத் குமார் அணிகளுக்கிடையில் தாக்குதல் சம்பவம் ஒன்று ஏற்பட்டதோடு, இதில் நடிகை சங்கீதாவை சரத்குமாரின் அணியைச் சேர்ந்த வலது கை எனக்கூறப்படும் ஒருவர் தாக்கியதா தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, விசாலும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
பின்னர் பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சுமூக நிலை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தல் இறுதியாக 2012 இல் நடைபெற்றதோடு, இதில் தொடர்ச்சியாக மூன்று முறையாக சரத்குமார் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5942","attributes":{"alt":"","class":"media-image","height":"430","typeof":"foaf:Image","width":"319"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5943","attributes":{"alt":"","class":"media-image","height":"430","typeof":"foaf:Image","width":"462"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5944","attributes":{"alt":"","class":"media-image","height":"430","typeof":"foaf:Image","width":"285"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5945","attributes":{"alt":"","class":"media-image","height":"430","typeof":"foaf:Image","width":"563"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5946","attributes":{"alt":"","class":"media-image","height":"430","typeof":"foaf:Image","width":"485"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5948","attributes":{"alt":"","class":"media-image","height":"430","typeof":"foaf:Image","width":"364"}}]]

Add new comment

Or log in with...