நாசரா, சரத்குமாரா? பரபரப்பான தேர்தல் இன்று

பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று (18) காலை 7 மணிக்குத் தொடங்கியது. 
 
நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருப்பவரும், அதே பதவிக்கு மீண்டும் போட்டியிடுபவருமான ராதாரவியே முதலில் வாக்களித்தார்.
 
நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் நடக்கும் இந்தத் தேர்தல், சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
 
வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு நடாத்தப்படும் இந்தத் தேர்தலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
காலையில் கூட்டம் அதிகரிக்கும் முன்பே வாக்களிக்க முக்கிய நட்சத்திரங்கள் ஆர்வத்துடன் வர ஆரம்பித்துள்ளனர். இந்தத் தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பொன்வண்ணனும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகின்றனர்.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5912","attributes":{"alt":"","class":"media-image","height":"286","style":"font-size: 13.008px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"460"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5914","attributes":{"alt":"","class":"media-image","height":"342","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
 
சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமாரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும், துணைத் தலைவர் பதவிக்கு விஜயகுமார் மற்றும் சிம்புவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் போட்டியிடுகின்றனர். 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5913","attributes":{"alt":"","class":"media-image","height":"350","style":"font-size: 13.008px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
மாலை 5 மணி வரை இவ்வாக்களிப்பு நடைபெறவுள்ளதோடு, வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு, இரவு 9 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...