சீனாவிலிருந்து வந்த மாணவர்கள் 16இல் விடுவிக்கப்படுவர்?

சீனாவின் வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  மாணவர்கள் 33 பேரையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்க முடியுமென தொற்றுநோய் ஆராய்ச்சி பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படும் 14 நாட்கள் எதிர்வரும் சனிக்கிழமையுடன் (15) முடிவடைவதாக பிரதான தொற்றுநோய் பிரிவின் ஆராய்ச்சியாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர்,  அவர்களை தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதற்கான எந்தவித தேவையும்  இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்கள் பெப்ரவரி முதலாம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அவதானிப்பதற்காக தியத்தலாவை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...