ஆலையடிவேம்பு, தமன பிரதேச காணிப் பிரச்சினை தொடர்பாக விசாரணை | தினகரன்

ஆலையடிவேம்பு, தமன பிரதேச காணிப் பிரச்சினை தொடர்பாக விசாரணை

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக் கமைய ஆலையடிவேம்பு மற்றும் தமண பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எல்லைப் பிரதேசங்களுக்கு நேற்று முன்தினம் (13) நேரில் சென்ற அரச அதிகாரிகள் காணிப்பிரச்சினை தொடர்பாக பார்வையிட்டதுடன் விசாரணையிலும் ஈடுபட்டனர்.

ஆலையடிவேம்பு மற்றும் தமண பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைக் கிராமமான பாவாபுரம் வயற் பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான நெற்காணிகளில் தமண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெஹெரகல (மாந்தோட்டம்) கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் அத்துமீறி நெற் செய்கையில் ஈடுபடுவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

மேலும் தமிழ், முஸ்லிம் மக்களை அப்பிர தேசத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து அடாவடித்தனங்களில் ஈடுபடுவது குறித்தும் விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டது. பாவாபுரம் வயற் பிரதேசத்திற்கு விஜயம் செய்த அதிகாரிகள் குழு பிரச்சி னைக்குரிய குறித்த காணிகளின் உரிமை யாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய துடன், அரச அனுமதியின்றித் சட்ட விரோதமாகத் துப்பரவு செய்யப்பட்டிரு ந்த காணிகளையும் பார்வையிட்டனர்.

அத்தோடு நெற் செய்கையின் பொரு ட்டு அப்பிரதேசத்தில் தங்கியிருந்த விவசாயிகளிடம் குறித்த பிரச்சினை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண் டனர்.

அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்களை பாவாபுரம் பகுதியிலுள்ள அவர்களது காணிகளுக்குள் நுழையவிடாமல் தடுப்பது மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்பில் இருதரப்பாரோடும் கலந்துரையாடி சமரசம் செய்ததுடன், தமது காணிக்கான முறையான அத்தாட்சிப்பத்திரம் வைத்துள்ள எவரும் அதில் முறையாக நெற்செய்கையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தனர்.

வாசிக்குடா விசேட நிருபர் 


Add new comment

Or log in with...