ஞானசார தேரர் நீதிமன்றில்ஆஜர்

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (13) நீதிமன்றில் ஆஜரானார்.
 
நீதிமன்ற உத்தரவை மதிக்காத வகையில் நீதிமன்றத்திற்கு ஆஜராகாத இவர் உள்ளிட்ட மூவருக்கு நேற்றைய தினம் (12) நீதிமன்றத்தினால் கைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
 
இன்று (13) காலை குறித்த நால்வரும் கொழும்பு கோட்டை நீதிபதி பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜராகினர்.
 
பரிசுத்த குர்ஆனை அவமதித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் இவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

There is 1 Comment

நாங்களா வந்தாத்தான்... ஹா... அந்த பயம் இருக்கணும். இவர ஜெயில்ல போட்டா.. நான் என்ர காதை அறுத்து தருவேன்

Add new comment

Or log in with...