பாரத லக்‌ஷ்மன் வழக்கில் துமிந்த ஆஜர் | தினகரன்


பாரத லக்‌ஷ்மன் வழக்கில் துமிந்த ஆஜர்

முன்னாள் அமைச்சர் பாரத லக்‌ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா உள்ளிட்ட 13 சந்தேகநபர்கள் இன்று (12) நீதிமன்றில் ஆஜரானார்கள்.
 
குறித்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, பத்மினி ரணவக குணதிலக, எம்.சி.பி.எஸ். மொராயஸ் ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் இடம்பெற்றது.
 
இதன்போது குறித்த வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட முறைப்பாட்டாளர்கள் மற்றும் வாதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
 
படங்கள், காணொலி: வாசித்த பட்டபெந்திகே

There is 1 Comment

இவருக்குதான் எல்லாம் மறந்திற்றே, தமிழ் படம் பார்த்திருப்பார் போல

Add new comment

Or log in with...