கண்டி வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு செயலிழப்பு | தினகரன்

கண்டி வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு செயலிழப்பு

கண்டி வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு செயலிழந்து உள்ளதாக நோயாளர்கள் கவலை தெரிவிக் கின்றனர். மேற்படி சிகிச்சைப் பிரிவில் பல்வேறு திருத்த வேலைகள் மேற்கொள் ளப்பட்டு வருவதன் காரணமாக இவ்வாறு அன்றாடப் பணிகள் தாதமமாகி வருவ தாகவும் அவற்றை வெகு விரைவில் மேற்கொண்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்படியும் பாதிக் கப்பட்வர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைவர் ஏ. காமினி குமாரசிங்க இது பற்றி பின்வருமாறு தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 2ம் திகதி முதல் சத்திரசிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அத்துடன் விசேட பரிசோதனைகளும் தடைப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு, குருதிச் சுற்றோட்டத்தை திசை திருப்பும் ‘பைபாஸ்’ சத்திர சிகிச்சைகளும், இருதய அடைப்பைக் கண்டறியும் ‘என்ஜியோ கிராம்’ பரிசோத னைகள் ஐந்தும் மற்றும் இருதய சத்திர சிகிச்சைகள் ஐந்துமாக குறைந்தது 15 சத்திரசிகிச்சை அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் விசேட வைத்திய நிபுணர்கள் 11 பேரும், சாதாரண வைத்தியர்கள் 40 பேரும் தாதிமார்கள் 90 பேரும், ஏனைய ஊழியர்கள் 50 பேரளவிலும் கொண்ட சுமார் 200 மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு பிரிவாக இது உள்ளது. இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதானால் குறிப்பிட்ட பிரிவில் உள்ளவர்கள் ஏனைய வேறு பிரிவுகளுக்கு தற்காலிகமாக இணைக்கப்பட் டுள்ளனர்.

இதன் காரணமாக சுமார் 1200 பேர் அளவில் தாமதப்பட்டியலில் (வெய்டிங் லிஸ்ட்) உள்ளனர். அவர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத வர்களாக உள்ளனர். அதேபோல் 1500க்கு மேற்பட்டவர்கள் இருதய அடைப்பைக் கண்டறியும் எஞ்சியோகிராம் பரிசோத னைக்காக காத்து நிற்கின்றனர்.

அதேநேரம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 5 மாடிகளைக் கொண்ட வார்ட்டில் வசதியளிக்கக் கூடிய நிலை காணப்பட்ட போதும் அதனை பயன்படுத்தும் நிலையும் இல்லாமல் உள்ளது. அதே நேரம் அக்டோபர் 5ம் திகதிக்கு திருத்த வேலைகள் பூரணப்படுத்தப்படும் எனத் தெரிவித்த போதும் அதுவும் இன்னும் முற்றுப் பெறாத நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக அனேக நோயாளர்கள் தமது தேவைகளுக்காக தனியார் வைத்தியச ¡லைகளை நாட வேண்டியவர்களாகவும் அதிகளவு பணம் செலவிட வேண்டிய நிலையும் காணப்படுவதாகவும் இதற்கு அதிகாரிகள் கூடிய கவனமெடுத்து பணியைத் துரிதப்படுத்தும்படி மேற்படி சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

(அக்குறணை குறூப்,பூஜாப்பிட்டி தினகரன் நிருபர்கள்) 

Add new comment

Or log in with...