புகழ்பெற்ற நடிகை ஆச்சி மனோரமா காலமானார் | தினகரன்


புகழ்பெற்ற நடிகை ஆச்சி மனோரமா காலமானார்

பழம்பெரும் நடிகையும், தனது நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை கவர்ந்தவருமான ஆச்சி மனோரமா காலமானார்.
 
இறக்கும்போது இவருக்கு வயது 78.
 
நேற்றிரவு (10) உணவு உண்ட பின்னர், தன்னால் சுவாசிப்பதற்கு கடினமாக இருப்பதாக கூறியதாக அவரது உறவினர் ஒருவரான தமிழரசு தெரிவித்திருந்தார். "அது வரை அவர் நன்றாகத்தான் இருந்தார்" என அவர் கூறினார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5583","attributes":{"alt":"","class":"media-image","height":"1150","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 650px; height: 939px;","typeof":"foaf:Image","width":"796"}}]]
 
அதன் பின்னர் கிறீம்ஸ் வீதியிலுள்ள, அபலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
அதன் பின்னர் அவர் மாரடைப்பு மற்றும் பல்லுறுப்பு செயலிழப்பு காரணமாக இறந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில், சுமார் 1,200 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமா, 1,000 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகை என்ற கின்னஸ் சாதனையையும் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5584","attributes":{"alt":"","class":"media-image","height":"1162","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 650px; height: 983px;","typeof":"foaf:Image","width":"768"}}]]
 
இது தவிர 1,000 இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தவராவார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"5585","attributes":{"alt":"","class":"media-image","height":"1117","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 650px; height: 943px;","typeof":"foaf:Image","width":"770"}}]]
 
'வா வாத்தியாரே, டில்லிக்கு ராஜான்னாலும், மெட்ராஸ சுத்தி காட்ட, தெரியாதோ நோக்கு தெரியாதோ' என சுமார் 300 இற்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.
 
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற மனோரமா, 2002 இல் பத்தம ஶ்ரீ விருதையும், புதிய பாதை படத்திற்காக தேசிய விருதையும், வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுக்கொண்டவராவார். 
 
வேறு பெயர்கள்: ஆச்சி, கோபிசாந்தா
 
பிறப்பு : 1937, மே மாதம் 26 ஆம் திகதி
 
பிறந்த இடம் : மன்னார்குடி, மெட்ராஸ்
 
கணவர் : எஸ்.எம். இராமநாதன் (1964-1966 விவாகரத்து)
 
பிள்ளைகள்: பூபதி (பாடகர், நடிகர்
 
முதல் திரைப்படம்: மாலையிட்ட மங்கை (1958)
 
கதாநாயகியாக : 1963 - கொஞ்சும் குமரி

Add new comment

Or log in with...