சேயாவின் தந்தை DNA பரிசோதனைக்கு | தினகரன்

சேயாவின் தந்தை DNA பரிசோதனைக்கு

கொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் தந்தையை DNA பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
குற்றப் புலனாய்வுப்பு பிரிவினால் (CID) முன்வைக்கப்பட்ட சத்தியக்கடதாசியின் அடிப்படையில் இன்றைய தினம் (08) மினுவங்கொடை நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போது, CID இனர் சேயாவின் தந்தையை மரபணுச் சோதனைக்கு (DNA) உட்படுத்த அனுமதி கோரினர். இதனை கருத்தில் எடுத்த நீதிமன்றம், அதற்கான அனுமதியை வழங்கியது.
 
இதேவேளை குறித்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றில் ஆஜரான சேயாவின் தந்தை இதற்கு தான் பூரண சம்மதத்தை வழங்குவதகா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கொண்டயா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவின் மரபணு பொருந்தவில்லையென தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, கைதுசெய்யப்பட்ட அவரது மூத்த சகோதரன் சமன் ஜயலத் நேற்றுமுன்தினம் (06) DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
சேயா செதெவ்மி கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அடுத்த நாள் (செப். 13) தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஓடை ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...