ஜனாதிபதி ஆணைக்குழுவில் கோதாபய | தினகரன்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் கோதாபய

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ இன்று (08) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சிவில் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பில் விசாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், குறித்த பணிக்காக, அவர்கள் சிவில் உடையில் காணப்பட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன், தவிர ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினரையும் இதற்காக பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததோடு, அது தொடர்பிலும் விசாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...