வடக்கு இ.போ.ச. வருமானம் ரூ. 03 கோடியினால் அதிகரிப்பு | தினகரன்

வடக்கு இ.போ.ச. வருமானம் ரூ. 03 கோடியினால் அதிகரிப்பு

வட மாகாணத்திலுள்ள இ.போ.ச. டிப்போக்களின் வருமானம் 3 கோடியி னால் அதிகரித்துள்ளதாக வடபகுதி டிப்போ அதிகாரிகள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவி டம் அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் யாழ்ப்பாணம், பருத் தித்துறை, கரைநகர், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய 7 டிப்போகளினதும் இலாபம் ஒரு கோடி 75 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கள் கூறியுள்ளனர்.

வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா டிப்போ அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் போதே அவர்கள் வடக்கில் இ.போ.ச. இலாபம் ஈட்டி வருவது குறித்து தெரி வித்துள்ளனர்.

ஏனைய டிப்போக்களுடன் ஒப்பி டுகையில் வடபகுதி டிப்போ ஊழியர் கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது குறித்து பாராட்டுத் தெரிவித்த அமைச்சர் தனக்கு வடபகுதி இ.போ.ச. ஊழியர் களே அதிக ஒத்துழைப்பு வழங்குவதா கவும் குறிப்பிட்டுள்ளார்.

இ.போ.ச.வின் உயர்வுக்கு பங்களிக் காது தமது பொக்கட்டை நிரப்பவே சில ஊழியர்கள் முயல்வதாகவும் இ.போ.ச.வை தான் மேம்படுத்துவதா கவும் குறிப்பிட்ட அமைச்சர் இ.போ. ச.வை ஒருபோதும் தனியார்மயப் படுத்த இட மளிக்கப் போவதில்லை என் றும் கூறி னார்.

வடபகுதி இ.போ.ச. ஊழியர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் அவ ற்றை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

எம்.எஸ். பாஹிம்


Add new comment

Or log in with...