Tuesday, October 6, 2015 - 10:45
கொட்டதெனியாவ சிறுமி சேயாவை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையான மாணவன் பொலிஸ் மாஅதிபருக்கு முறைப்பாடொன்றை செய்துள்ளான்.
எழுத்து மூலமாக வழங்கப்பட்ட இம்முறைப்பாட்டில், தான் கைதுசெய்யப்படும் போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தனது கையடக்க தொலைபேசி, சிம் அட்டை, இணைய இணைப்பு டொங்கல், திருஷ்டிக்காக கட்டிய இரண்டு தாயத்துகள், மாணிக்க கல் பதித்த வெள்ளி துண்டு ஒன்று ஆகியவற்றை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குறித்த பொருட்களை மீள பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறே, அம்மாணவன் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளான்.
மேலும் குறித்த முறைப்பாட்டின் ஒரு பிரதி ஜனாதிபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment