தகவல் தனியுரிமை ஆர்வலர் ஸ்நோடன் ட்விற்றரில்

அமெரிக்காவைச் சேர்ந்த தனியுரிமை ஆர்வலரான ஸ்நோடன் தற்போது ட்விற்றரில் @snowden இணைந்துள்ளார்.
 
அவர் ட்விற்றரில் இணைந்து கடந்த 13 மணித்தியாலங்களில் சுமார் 8 இலட்சத்திற்கு மேற்பட்டோர் அவரை தொடர ஆரம்பித்துள்ளனர்.
 
நாட்டு மக்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது, கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியுடன் வெளிநாட்டவர்கள் பரிமாறும் தகவல்களை இரகசியமாக பதிவு செய்வது உள்ளிட்ட வேலைகளை, அமெரிக்க உளவு அமைப்புகள் செய்து வருவதை, கடந்த 2013ஆம் ஆண்டில் ஸ்நோடன் அம்பலப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து, கடந்த ஜூன் 21, 2013 இல், அரச சட்டங்களை மீறியமை மற்றும் நாட்டின் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் மீது அவரை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.
 
இதன் காரணமாக அவர் தஞ்சம் கோரி ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றார். 
 
இவர் தற்போது ரஷ்யாவில் தற்காலிக தஞ்ச உரிமையின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...