த்ரிஷாவுக்கு உதவிய கமல் | தினகரன்


த்ரிஷாவுக்கு உதவிய கமல்

கமலுடன் த்ரிஷா இணைந்து நடித்துள்ள ~தூங்காவனம்' திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டிரைலருக்கு இரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தூங்காவனம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய த்ரிஷா, 'இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடம் மிகுந்த சவால் நிறைந்தது. நான் நன்றாக நடிப்பதற்கு கமல் சார் எனக்கு மிகவும் உதவி செய்தார்.

அவர் வழிகாட்டுதலின்படிதான் நடித்தேன். தனிப்பட்ட முறையில் அவர் என் மீது அக்கறை எடுத்து சிறப்பாக நடிக்க வைத்தார். டப்பிங் நடந்த போது நான் ஏற்ற இறக்கத்துடன் சரியாக பேசுவதற்கு கமல் சார் ஊக்கம் அளித்தார்.

ஏற்கனவே, நான் கமல் சாருடன் நடித்த ~மன்மதன் அம்பு' படத்தில் டப்பிங் பேச முயற்சி செய்தேன். ஆனால் இந்த படத்தில் நான் எனது குரலில் டப்பிங் பேசுவதற்கு காரணமாக இருந்தவர் கமல் சார்தான்'' என்றார் மகிழ்ச்சியுடன்.

கமலின் திரைக்கதையில் உருவாகி இருக்கும் தூங்காவனம் படத்தை கமலின் உதவியாளராக இருந்த ராNஜஷ் செல்வா இயக்கி இருக்கிறார். பிரகாஷ் ராஜ் , யு+கிசேது உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இதில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் கமல் தங்களுக்கு பல்வேறு விதங்களில் உதவியதாக கூறினார்கள்.


Add new comment

Or log in with...