யாழில் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு | தினகரன்

யாழில் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு

முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார்

யாழில் தேசிய கடற்கரையினை தூய் மைப்படுத்தும் செயற்திட்டத்தினை வைபவ ரீதியாக வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய கடற்கரை யினை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் பிரகடனம் 21 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது.

அதன் பிரகாரம், யாழ். மாவட்டத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் இணைந்து இச்செயற்திட்டத்தினை முன்னெ டுத்து வருகின்றன. அதனடிப்படையில், யாழ். மாவட்ட செயலகத்தினால் ஒருங்கமைப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்வினை வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைப் பகுதியில் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மதத் தலைவர்கள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன். வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன், வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் சுற்றாடல் அமைச்சின் அதிகா ரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...