சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று | தினகரன்


சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று

ஜனாதிபதி தலைமையில் காலிமுகத்திடல் சுத்தம் செய்யும் நிகழ்வு
 
கடற்கரையை தூய்மைப்படுத்தும் சர்வதேச தினம் இன்றாகும்.
 
அதன் அடிப்படையில், கடற்கரையை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (19) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.
 
[[{"type":"media","view_mode":"media_large","fid":"4760","attributes":{"alt":"","class":"media-image","height":"480","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 383px; height: 480px; float: right;","typeof":"foaf:Image","width":"383"}}]]நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்து செல்லும் கடற்கரை சூழல் மாசடைதல் காரணமாக அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது. 
 
இதற்கு உடனடி தீர்வொன்றை வழங்கும் வகையில் கடற்கரைப் பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"4761","attributes":{"alt":"","class":"media-image","height":"398","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 650px; height: 398px; float: left;","typeof":"foaf:Image","width":"650"}}]]"கடலை பாதுகாப்போம், நாமும் பாதுகாப்பாய் இருப்போம்" என்ற தொனிப்பொருளில் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரச்சபை இத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
 
அவ்வகையில் கொழும்புக்கான திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (19) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக, கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், மேல் மாகாணசபை முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன் உட்பட பல்வேறு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகளைச் சார்ந்தவர்கள், கொழும்பு பல்கலைக்கழக அனைத்து பீடங்களும் பிரிவுகளைச் சார்ந்தோர் இத்திட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு, மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து இந் நிகழ்ச்சித்திட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

Add new comment

Or log in with...