பேஸ்புக்கில் ~டிஸ்லைக்' பொத்தான் வருகிறது | தினகரன்

பேஸ்புக்கில் ~டிஸ்லைக்' பொத்தான் வருகிறது

பேஸ்புக் தனது சமூக வலையமைப் பில் ~டிஸ்லைக்' பொத்தானை அறிமு கம் செய்ய ப்போவதாக அதன் நிறுவ னர் மார்க் சுகர்பேர்க் அறிவித்துள்ளார்.

கலிபோர்னியாவின் பேஸ்புக் தலை மையகத்தில் இடம்பெற்ற கேள்வி, பதில் நிகழ்வொன்றில் உரையாற்றிய 31 வயது சுகர்பேர்க், அறிமுகமாகும் டிஸ்லைக் பொத்தான் மக்களுக்கு கவலையை வெளியிட பயன்படுத்துவதாகவே இருக் கும் என்று குறிப்பிட்டார்.

இந்த முறையை பேஸ்புக் விரைவில் சோதனை முயற்சியாக அறிமுகம் செய் யும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2009ம் ஆண்டு பேஸ்புக் தனது லைக் பொத்தானை அறிமுகம் செய்த நாள் தொடக்கம் டிஸ்லைக் பொத்தானை இணைக்கும் கோரிக்கை முன்வைக்கப்ப ட்டு வருதாகவும் சுகர்பேர்க் சுட்டிக்காட் டினார்.

எனினும் ஏனையவர்களின் பதிவுகளு க்கு எதிராக வாக்களிக்கும் முறையாக அது இருக்காது என்றும் அது விருப்ப பொத்தானை பன்படுத்த முடியாத கவலை தரும் விடயங்களுக்கு பயன்படுத்துவதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார்.

இந்த டிஸ்லைக் பொத்தான் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் தாக்கத்தை கண்டறிந்து பின்னர் நடைமுறையில் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...