சதுர சேனாரத்ன எம்.பிக்கு அழைப்பாணை | தினகரன்

சதுர சேனாரத்ன எம்.பிக்கு அழைப்பாணை

நேற்றைய தினம் (15) பொலிஸின் கட்டுப்பாட்டில் இருந்தோரை அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கம்பஹா மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஐ.தே.கவிலிருந்து கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் சதுர சேனாரத்ன ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இச்சம்பவத்தில் மூவர் காயமுற்று ராகமை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று (15) பிற்பகல் வேளையில் பொலிஸ் நிலையம் சென்ற சதுர சேனாரத்ன எம்.பி, கைது செய்யப்பட்டிருந்தோருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாரினால் நீதிமன்றில விளக்கமளிக்கப்பட்டதை அடுத்து சதுர சேனாரத்னவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி இது குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
 
இவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரபல பாராளுமன்ற உறுப்பினர்களின் மகன்களாவார்கள்.

Add new comment

Or log in with...