செதெவ்மி சிறுமி கொலை வழக்கு சி.ஐ.டியிடம் | தினகரன்

செதெவ்மி சிறுமி கொலை வழக்கு சி.ஐ.டியிடம்

கொட்டதெனியாவவில் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்புகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சிறுமி துஷ்பிரயோகிக்கப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
ஆயினும் இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையிலேயே இவ்விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இவ்விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Add new comment

Or log in with...