குற்றவாளிக்கு தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் | தினகரன்

குற்றவாளிக்கு தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பாலகியின் பூதவுடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவ சிறுமி சேயா சதெளமியின் இறுதிக் கிரியை நேற்று மாலை அகரங்கஹ பகுதியில் இடம்பெற்றது. பெருந்திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் 4 1/2 வயதான சதெளமி நேற்று இறுதிப் பயணம் மேற்கொண்டார்.

இதேவேளை இந்த கொலையுடன் தொடர்புள்ள சந்தேக நபர்களுக்கு கடும் தண்டனை வழங்குமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படல்கம பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் பங்குபற்றினர்.

சதெளமினி கடந்த 12 ஆம் திகதி காணாமல் போனதோடு அவரின் சடலம் வீட்டிலிருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மோசமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை மூலம் நிச்சயமானது. தமது பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி மறுநாள் காணாமல் போனளாக முறை யிடப்பட்டது. சதெளமி அணிந்திருந்த ஆடைகள் கட்டிலின் மேல் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதோடு அவரின் சடலத்தில் இருந்து இரு முடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தக் கொலை தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை

முடிக்கிவிட்டுள்ளதோடு கொலை தொடர்பாக அவரின் தாய், தந்தை, வீட்டிலிருந்த உறவினர்கள் உட்பட சுமார் 20 ற்கும் அதிகமானவர்களிடம் சாட்சியம் பதியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியை உறவினர்கள் யாராவது பாலியல் வல்லுறவு செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளதோடு அது தொடர்பாகவும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட் டுள்ளன.

பிரேத பரிசோதனையை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சிறுமியின் சடலம் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பிற்பகல் வரை பெருந்திரளான மக்கள் சிறுமிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரப்பட்டு வருகிறது. விசாரணையில் திருப்புமுனை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம். எஸ். பாஹிம்


Add new comment

Or log in with...