குளவி கொட்டியதில் 22 தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதி | தினகரன்


குளவி கொட்டியதில் 22 தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் அயரபி தோட்டத்தில் நேற்று முன்தினம் (12) மாலை 14 பேர் குளவி கொட்டுக்கு உள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் முனியப்பன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்களையே குளவிகள் இவ்வாறு தாக்கியுள்ளன.

மேற்படி ஆலயத்தில் அருகிலுள்ள மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் ஆண்களே பாதிக்கப் பட்டுள்ளனர்.

இதில் காயமடைந்தவர்கள் சிறிது சிறிதாக சிகிச்சையின் பின் வீடு திரும்புவதாகவும் பலத்த காயங்களுடன் காணப்படுபவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலிங்கோனி தோட்டத்தில் அன்று பிற்பகல் 12 மணியளவில் தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த எட்டு தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.

தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த போது தேயிலை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகள் தங்களை இவ்வாறு தாக்கி யுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர் கள் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான எட்டு பேரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஆறு பேர் பெண்களும் இரண்டு பேர் ஆண்களும் அடங்கு கின்றனர். 


Add new comment

Or log in with...