ஒன்பது உணவுப் பொருட்களுக்கு விசேட வரி அதிகரிப்பு என்பது பொய் | தினகரன்


ஒன்பது உணவுப் பொருட்களுக்கு விசேட வரி அதிகரிப்பு என்பது பொய்

மறுக்கிறது நிதி அமைச்சு

ஒன்பது உணவுப் பொருட்களுக்கான விசேட வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிதி அமைச்சு நிராகரித்துள்ளது. பருப்பு, வெங்காயம், குரக்கன், மாஜரின் மற்றும் கெளப்பி என்பவற்றுக்கு வரி அதிகரிக்கப்பட வில்லை என்று குறிப்பிட்டுள்ள நிதி அமைச்சு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் சீனிக்கு மட்டுமே விசேட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

குரக்கன், கெளபி, கடலை, மாஜரின் அடங்கலான 9 பொருட்களுக்கு இறக்குமதி வரி, வற் வரி துறைமுக வரி மற்றும் வேறு வரிகளுக்கு பதிலாக விசேட வர்த்தக பொருள் வரி காலத்துக்கு காலம் விதிக்கப்படுகிறது. பாவனை யாளரையும் உற்பத்தியாளரையும் பாது காக்கும் வகையிலே இவ்வாறு வரி விதிக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூர் உற்பத்திகள் சந்தைக்கு வருகையில் இறக்குமதியை பலவீனப் படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விசேட வரி அதிகரிக்கப் படுகிறது. அதன்படியே உருளைக்கிழங் கிற்கான விசேட வரி 30 ரூபாவில் இருந்து 40 ஆகவும் சீனிக்கான வரி 18 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் சீனி உற்பத்தியை ஊக்கு விப்பதற்காக இவ்வாறு சீனிக்கு வரிவிதிக்கப்பட்டாலும் சீனியின் சில்லறை விலையில் மாற்றம் ஏற்படவில்லை எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

பைக்கட் செய்யப்பட்ட சீனிக்கான சில்லறை விலை 95 ரூபாவாகவும் பைக்கட் செய்யப்படாத சீனி கிலோ ஒன் றின் விலை 88 ரூபாவாகவும் நிர் ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் படுகிறது.

எம்.எஸ். பாஹிம்


Add new comment

Or log in with...