சிங்கப்பூர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

சிங்கப்பூரில் இன்று (11) நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் யாவும் நிறைவடைந்துள்ளது.
 
இத்தேர்தலில், மக்கள் நடவடிக்கை கட்சியின் (PAP) ஸ்தாபகர்களில் ஒருவரான சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் ஈவ் இனது மகனான தற்போதைய பிரதமர் லீ சின் லூங் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
 
அந்நாட்டு நேரப்படி இன்று (11) காலை 8.00 (இலங்கையில் அதிகாலை 5.30) மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்பு இரவு 8.00 மணி வரையான 12 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.
 
[[{"type":"media","view_mode":"media_large","fid":"4427","attributes":{"alt":"","class":"media-image","height":"320","typeof":"foaf:Image","width":"480"}}]]
 
தற்போதைய பிரதமர் லீ சின் லூங்
 
[[{"type":"media","view_mode":"media_large","fid":"4428","attributes":{"alt":"","class":"media-image","height":"323","style":"font-size: 13.008px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"480"}}]]
 
எதிர்க்கட்சி (தொழிலாளர் கட்சி) தலைவர் லோ தியா கியாங் 
 
 
இலங்கை நேரப்படி பிற்பகல் 5.30 மணிக்கு தேர்தல் வாக்களிப்புகள் யாவும் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இன்று நள்ளிரவு வேளையில் தேர்தல் முடிவுகள் வெளியிவரும்ம் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
89 பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்ட சிங்கப்பூரின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 45 பாராளுமன்ற ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடைபெற்ற தேர்தல் சிங்கப்பூரின் 17 ஆவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் என்பதோடு, 5 வருட ஆட்சிக் காலத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்தலில் சுமார் 2.46 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
 
கடந்த தேர்தலில் (2011) மக்கள் நடவடிக்கை கட்சி 80 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைத்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (WP) 7 ஆசனங்களைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...